Posts

திருக்குறள் 1

குறள் 1. அதிகாரம்-- 1. கடவுள் வாழ்த்து. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. எம்எஸ்கே மனோகரன் நாயனார் விளக்கம்:-      1.அகர :- "அ உ அம்" அகரம் எழுத்துகளின் முதல் எழுத்து ஆகும். 2.முதல எழுத்தெல்லாம்:-  ""அ"" என்ற முதல்  எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும்.  3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில்  சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை.  எனவே ஆதியை பகவான் என்றார். உலகத்தில் சூரியனும் +அ என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றுள்ளது.   மனிதர்களும் மற்ற  பிற அனைத்து  உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. எனவே சூரிய சக்தி + அக
Recent posts