குறள் 1.
அதிகாரம்-- 1. கடவுள் வாழ்த்து.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.
எம்எஸ்கே மனோகரன் நாயனார் விளக்கம்:-
1.அகர :- "அ உ அம்" அகரம் எழுத்துகளின் முதல் எழுத்து ஆகும்.
2.முதல எழுத்தெல்லாம்:- ""அ"" என்ற முதல் எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும்.
3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில் சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை. எனவே ஆதியை பகவான் என்றார்.
உலகத்தில் சூரியனும் +அ என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றுள்ளது. மனிதர்களும் மற்ற பிற அனைத்து உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. எனவே சூரிய சக்தி + அகரம் என்ற எழுத்தும் இவை இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது. நமது இரண்டு கண்களும் இல்லை என்றால் இருளாக இருக்கும். கண்களை மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது .
ஆனால் அறிவு என்ற அகக்கண்களையும் திறந்து பார்க்க எழுத்தறிவு தேவை. அதைப் படிக்கும் அறிவு மூலம் ஞானம் கிடைக்கும். பிறகு மனிதர்கள் எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.
4.முதற்றே உலகு.;உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம் தேவை. ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது மரம் செடி கொடி முதல் எல்லாம் அழியும். உலகம் முழுவதும் இருளாக இருக்கும். எனவே இவை இரண்டும் இவ்வுலகிற்கு அவசியம் தேவை
மேலும் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் சோதிட சாஸ்திரம் அனைத்திற்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் காரணமாக இயங்கு கின்றது. இதனால் மனிதர்களுக்கு அறிவு கண் திறக்கும் பிறகு அவர்கள் அறிவு ஜீவிகள் ஆக முடியும். இதுமனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வருகிறது என்றால் மிகையாகாது என்கிறார்.
காலையில் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் வரை மறுநாள் மீண்டும் சூரியன் தோன்றும் வரை உள்ள கால அளவை கணக்கிட்டு ஒரு நாள் என அக்காலத்திலேயே ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு தனது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாளின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது என்கிறார்.
முக்காலும் உணர்ந்த முனிவர் தெய்வ புலவர் திருவள்ளுவர். எங்குமே தனது பெயர்/ குலம் குறித்தும் எழுதவில்லை.

Comments
Post a Comment